மேலூர் அருகேகோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார்- போலீசார் விசாரணை


மேலூர் அருகேகோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார்- போலீசார் விசாரணை
x

மேலூர் அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

கொட்டாம்பட்டி,

மேலூர் அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு திரும்பவில்லை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலத்தைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 50). இவர் மேலூர் சொக்கம்பட்டியில் பல சரக்கு கடை வைத்துள்ளார். இவரது மனைவி தீபா(42), மகன் நவீன்(19), மகள் நந்தினி(22). மகளுக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் எட்டிமங்கலம் அருகே உள்ள தங்களது குலதெய்வமான அய்யனார் கோவிலுக்கு சாமி கும்பிட தீபா(42) சென்றார்.

ஆனால் இரவு நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று எட்டிமங்கலம் அருகே வயல்வெளியில் உள்ள கிணற்றில் பெண்ணின் பிணம் மிதப்பதாக மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு படையினரின் உதவியுடன் உடலை மீட்டனர்.

விசாரணை

தகவல் அறிந்து அங்கு வந்த தீபாவின் குடும்பத்தினர் இறந்தது அவர் தான் என்பதை உறுதி செய்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் தீபா கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story