மொடக்குறிச்சி அருகே பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதம்


மொடக்குறிச்சி அருகே  பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதம்
x

மொடக்குறிச்சி அருகே பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை 45-ம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் எழுமாத்தூருக்கு சென்று வருகிறது. அதே நேரத்தில் ஈரோட்டில் இருந்து தாராபுரம் நோக்கி தனியார் பஸ்சும் சென்று வருகிறது. இந்த 2 பஸ் டிரைவர்களுக்கு இடையே நேரம் குறித்த தகராறு ஏற்கனவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 45-ம் எண் டவுன் பஸ் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து எழுமாத்தூர் நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அதேநேரம் ஈரோட்டில் இருந்து தாராபுரம் நோக்கி தனியார் பஸ்சும் சென்றது. மொடக்குறிச்சி அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் சென்றபோது திடீரென 2 பஸ்களின் டிரைவர்களும் பஸ்சை நடுரோட்டிலேயே நிறுத்தி வாக்குவாதம் செய்துகொண்டார்கள்.

இதனால் ரோட்டில் இருபுறமும் வந்த வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டிரைவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்ைத நடத்தி பஸ்களை புறப்பட்டு செல்ல வைத்தார்கள். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

1 More update

Related Tags :
Next Story