மூங்கில்துறைப்பட்டு அருகேபள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


மூங்கில்துறைப்பட்டு அருகேபள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே பொரசப்பட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு போட்டியில் எவ்வாறு சிறந்து விளங்குவது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் விளையாட்டு போட்டியில் எவ்வாறு பங்கேற்க வேண்டும், விளையாட்டில் பங்கேற்று அதிக அளவில் சாதிப்பதினால் மாணவர்களின் வாழ்க்கை தரம் உயர்வது மட்டுமல்லாமல் அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுவது, தனித்திறமையை வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். இதில் தலைமை காவலர் ஞானப்பிரகாசம், பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், ஆசிரியர்கள் ஏழுமலை, தனசீலி, பாத்திமா மேரி, சந்தியாகுராஜ், கித்தேரி, சார்ஸ், ஜெயபிரகாஷ், நாராயணன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story