ஊஞ்சலூர் அருகே மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது


ஊஞ்சலூர் அருகே  மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது
x

மோட்டார்சைக்கிள்

ஈரோடு

ஊஞ்சலூர் அருகே உள்ள அண்ணமார் கோவில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தேவனேசன். அவருடைய மகன் ஈஸ்வரன் (வயது 50). இவர் குடும்பத்துடன் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருகிறார். ஈஸ்வரன் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வீட்டு முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தினார். பின்னர் சாவியை எடுத்துக்கொண்டு் அருகே உள்ள சண்முகம் என்பவரின் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அவர் வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. மர்மநபர் ஒருவர் அவரது மோட்டார்சைக்கிளை தள்ளி சென்றதை பார்த்தார். இதனால் ஈஸ்வரன், "திருடன், திருடன்" என்று சத்தம் போட்டுள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து, மோட்டார்சைக்கிளை தள்ளி சென்றவரை பிடித்து மலையம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தாமரைப்பாளையம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் பழனிச்சாமி (55) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story