பண்ணாரி அருகே சிறப்பு அதிரடிப்படை முகாமை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு


பண்ணாரி அருகே  சிறப்பு அதிரடிப்படை முகாமை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு
x

பண்ணாரி அருகே சிறப்பு அதிரடிப்படை முகாமை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தாா்.

ஈரோடு

பவானிசாகர்

சந்தன மரக்கடத்தல் வீரப்பன் மறைவுக்குப் பிறகு வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் மற்றும் வனக் கொள்ளையர்கள் உள்ளிட்ட தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் வண்ணம் சத்தியமங்கலம் பண்ணாரியை அடுத்த புதுப்பீர்கடவு அருகே தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ேநற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மற்றும் கிராம மக்களுக்கு தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை மூலமாக செய்யப்படும் நலத்திட்டங்கள் மற்றும் வன குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்து சோதனை சாவடி அமைப்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை தலைவர் முருகன், கண்காணிப்பாளர் ராஜன், சத்தியமங்கலம் கோட்ட காவல்துறை உதவி ஆணையர் ஐமன்ஜமால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story