பெரியகுளம் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு


பெரியகுளம் அருகே  வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
x

பெரியகுளம் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

பெரியகுளம் வடகரை கல்லார் ரோட்டை சேர்ந்தவர் வீரமணி (வயது 35). அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் என்ற முட்டை கண்ணன். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கண்ணதாசன் அரிவாளை காட்டி வீரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதுகுறித்து பெரியகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் கண்ணதாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அரிவாளை காட்டி கண்ணதாசன் மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Next Story