புஞ்சைபுளியம்பட்டி அருகே வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


புஞ்சைபுளியம்பட்டி அருகே  வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள தாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 80). நேற்று முன்தினம் தாசம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நல்லம்மாள் நடந்து சென்றுகொண்டு இருக்கும்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் தாசம்பாளையம் பகுதியை சேர்ந்த பூவிழி, ஜெகதீஸ்வரி ஆகியோர் கடந்த மாதம் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் விபத்துகள் நடப்பதால், வேகத்தடை மற்றும் தெருவிளக்கு அமைக்கவேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திடீரென புஞ்சைபுளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

சாலை மறியல் போராட்டத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் போலீசாருடன் சென்று, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் உடனே அந்த பகுதியில் வேகத்தடுப்பான் (பேரி கார்டு) அமைக்கப்படும் என்றும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறி வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள். எனினும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் புஞ்சைபுளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story