சாத்தான்குளம் அருகேகோவில் கொடைவிழாவில் கோஷ்டி மோதல்


தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே கோவில் கொடைவிழாவில் கோஷ்டி மோதல் தொடர்பாக ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் சுந்தர் (40). இவர், அதே ஊரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் சக்திவேல் (45) என்பவரை போதையில் அவதூறாக பேசியதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுககு முன்பு அதே ஊரில் நடந்த கோவில் கொடைவிழாவில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது சக்திவேல், அவரது சகோதரர்கள் லிங்கராஜ், பாஸ்கர், பிரேம் ஆனந்த், பிரபாகர் ஆகியோர் சுந்தரை தாக்கினர். சக்திவேலை, சுந்தர், அவரது மகன் ரஞ்சித் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், இருத்தரப்பைச் சேர்ந்த சுந்தர், சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். இதில் சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story