சத்தியமங்கலம் அருகேகீழ்பவானி வாய்க்காலில் நீர்கசிவு சரிசெய்யப்பட்டது


சத்தியமங்கலம் அருகேகீழ்பவானி வாய்க்காலில் நீர்கசிவு சரிசெய்யப்பட்டது
x

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட நீர்கசிவு சரிசெய்யப்பட்டது

நாமக்கல்

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட நீர்கசிவு சரிசெய்யப்பட்டது.

நீர்கசிவு

சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் காளிகுளம் பகுதி வழியாக கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இதன் இடது கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லேசாக உடைப்பு ஏற்பட்டிருந்தது. அதன் வழியாக சிறிது சிறிதாக நீர் கசிந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

சரிசெய்யப்பட்டது

இந்த நிலையில் காளிகுளம் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் உடைப்பு பெரிதாகியதால் அதிக அளவு நீர்கசிந்து சென்றது. இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காளிகுளம் பகுதிக்கு சென்று உடைப்பை சரிசெய்யும் பணியில் இறங்கினார்கள். உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பணியாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். பின்னர் சிமெண்டு கலவை மூலம் அடைத்தனர். இதன் மூலம் நீர்கசிவு சரிசெய்யப்பட்டது.

எனினும் தொடர்ந்து நீர்கசிவு ஏற்படுகிறதா என கண்காணிக்கப்பட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story