சுல்தான்பேட்டை அருகே காய்கறி வியாபாரியை தாக்கி ரூ.2½ லட்சம் பறிப்பு- மர்ம ஆசாமிக்கு ேபாலீஸ் வலைவீச்சு


சுல்தான்பேட்டை அருகே காய்கறி வியாபாரியை தாக்கி ரூ.2½ லட்சம் பறிப்பு- மர்ம ஆசாமிக்கு ேபாலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே காய்கறி வியாபாரியைத் தாக்கி ரூ.2.60லட்சத்தை வழிப்பறி செய்துவிட்டு, தப்பிச்சென்ற மர்ம நபரைபோலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே காய்கறி வியாபாரியைத் தாக்கி ரூ.2.60லட்சத்தை வழிப்பறி செய்துவிட்டு, தப்பிச்சென்ற மர்ம நபரைபோலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கத்தியால் தாக்குதல்

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் நகரகளந்தையைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 44). இவர் செஞ்சேரிமலை அடுத்த பச்சாக்கவுண்டன்பாளையத்தில் தோட்டங்களில் விளையும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் விக்னேஷ்வரன் தனது கடையில் வியாபாரத்தை முடித்தார். பின்னர் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளவீட்டிற்கு காட்டுப்பாதையில் திரும்பிக் கொண்டு இருந்தார். நகர களந்தை ராமன் தோட்டம் அருகே சென்றபோது இருட்டில் பதுங்கி இருந்த ஆசாமி ஒருவர் வாகனத்தை வழிமறித்து விக்னேஸ்வரனை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

பணம் பறிப்பு

இதில், நிலைகுலைந்து அவர் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த மர்ம ஆசாமி தப்பி சென்றான். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த விக்னேஷ்வரன் தனது செல்போன் மூலம் தனக்கு நடந்த சம்பவம் குறித்து தனது பங்குதாரர் பழனிசாமிக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காரில் விரைந்து சென்ற பழனிச்சாமி உடனடியாக விக்னேஸ்வரனை மீட்டு பல்லடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். பின்னர் , மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து, விக்னேஸ்வரனை தாக்கி பணத்தைப் பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றார்.

இந்த வழிப்பறி சம்பவம் சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, நகரக் களந்தை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story