தட்டார்மடம் அருகே மூதாட்டி வீடுபுகுந்து 5 பவுன் நகை திருட்டு


தட்டார்மடம் அருகே மூதாட்டி வீடுபுகுந்து 5 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 4:25 PM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே மூதாட்டி வீடுபுகுந்து 5 பவுன் நகை திருடப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்த லிங்கப்பாண்டி மனைவி மங்கை (வயது 60). இவரது கணவர் இறந்து விட்டார். இவரது மகள் வாழ்வழகி திருமணமாகி சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். மங்கை மட்டும் அழகப்புரம் வீட்டில் தங்கிருந்து 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்று வருகிறார். தனிமையில் இருப்பதால் தினமும் அதே ஊரைச் சேர்ந்த பூங்கனி என்பவர் வீட்டில் படுத்து உறங்கி விட்டு, காலையில் அவரது வீட்டுக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் வீட்டுக்கு காலையில் வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. முதல்நாள் இரவில் மர்ம நபர் இவரது வீடுபுகுந்து நகையைதிருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்ட் நடராஜன் வழக்கு பதிவுசெய்து விசாரித்து மங்கை வீட்டில் நகை திருடிய மர்ம நபரை தேடிவருகிறார்.

1 More update

Next Story