தேனி அருகே போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு


தேனி அருகே  போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு:  சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x

தேனி அருகே போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பில் சார் பதிவாளர் உள்பட 5 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி அருகே அம்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சுபத்ரா. இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், "எனது தந்தை பார்த்தசாரதி பெயரில் கோபாலபுரம் பகுதியில் 12.5 சென்ட் நிலம் உள்ளது. போலி ஆவணம் மூலம் அந்த நிலத்தை கோபாலபுரத்தை சேர்ந்த திருவேங்கடம்மாள் தனது மகன் குலோத்துங்கன் பெயரில் தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

அதற்கு ஆவண எழுத்தர் பிரவீன்குமார் போலியான ஆவணம் தயாரித்து கொடுத்துள்ளார். தேனியை சேர்ந்த தாமஸ்ராஜ், செல்வேந்திரன் ஆகியோர் அதில் கையொப்பமிட்டதோடு, அந்த ஆவணத்தை சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து திருவேங்கடம்மாள், குலோத்துங்கன், பிரவீன்குமார், தாமஸ்ராஜ், செல்வேந்திரன் மற்றும் தேனி சார்பதிவாளர் விமலா ஆகிய 5 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தேனி அருகே அம்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சுபத்ரா. இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், "எனது தந்தை பார்த்தசாரதி பெயரில் கோபாலபுரம் பகுதியில் 12.5 சென்ட் நிலம் உள்ளது. போலி ஆவணம் மூலம் அந்த நிலத்தை கோபாலபுரத்தை சேர்ந்த திருவேங்கடம்மாள் தனது மகன் குலோத்துங்கன் பெயரில் தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

அதற்கு ஆவண எழுத்தர் பிரவீன்குமார் போலியான ஆவணம் தயாரித்து கொடுத்துள்ளார். தேனியை சேர்ந்த தாமஸ்ராஜ், செல்வேந்திரன் ஆகியோர் அதில் கையொப்பமிட்டதோடு, அந்த ஆவணத்தை சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து திருவேங்கடம்மாள், குலோத்துங்கன், பிரவீன்குமார், தாமஸ்ராஜ், செல்வேந்திரன் மற்றும் தேனி சார்பதிவாளர் விமலா ஆகிய 5 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story