தேனி அருகே ஜப்தி செய்த வீட்டில் மின்மோட்டார் திருட்டு
தேனி அருகே ஜப்தி செய்த வீட்டில் மின்மோட்டார் திருடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தேனி
தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் கிளை மேலாளராக பணியாற்றுபவர் விஜய். இவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அவர் பணியாற்றும் நிறுவனத்தில் கடன் வாங்கிவிட்டு, கடனை திருப்பிச் செலுத்தாததால் பழனிசெட்டிபட்டி சுப்பிரமணிய சிவா தெருவில் உள்ள ஒரு வீடு கோர்ட்டு உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.
சீல் வைக்கப்பட்டு இருந்த அந்த வீட்டுக்குள் வயல்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா என்பவர் தனது தாயாருடன் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த மின்மோட்டாரை திருடிச் சென்று விட்டார் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் கார்த்திக்ராஜா உள்பட 2 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story