திருவெண்ணெய்நல்லூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆத்திப்பட்டு தரைப்பாலம் பொதுமக்கள் அவதி


திருவெண்ணெய்நல்லூர் அருகே  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆத்திப்பட்டு தரைப்பாலம்  பொதுமக்கள் அவதி
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆத்திப்பட்டு தரைப்பாலத்தால் பொதுமக்கள் அவதியைடந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி

திருவெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, வாய்க்கால் உள்ளிட்டவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் திருவெண்ணெய்நல்லூர் அருகே ராகவன் வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆத்திப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், ஆத்திப்பட்டு, அரும்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி பழைய பட்டிணம் வழியாக மடப்பட்டுக்கு சென்று அங்கிருந்து உளுந்தூர்பேட்டை, பண்ருட்டிக்கு சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இருப்பினும் சிலர் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் அதன்வழியாக சென்று வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க அங்கு மேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story