உப்புக்கோட்டை அருகேசேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்
உப்புக்கோட்டை அருகே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தேனி
உப்புக்கோட்டை அருகே உள்ள டொம்புச்சேரியில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் குறுக்கே பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக போடி, தேவாரத்திற்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனைக்கு இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் பாலத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஓட்டை விழுந்து சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்த பாலம் இல்லையெனில் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்திற்கு சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்படும். எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story