உப்புத்துறை அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்


உப்புத்துறை அருகே  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்
x

உப்புத்துறை அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது

தேனி

ஆடி அமாவாசையையொட்டி மயிலாடும்பாறை அருகே உள்ள கருப்பசாமி கோவிலுக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் தேனியில் இருந்து கோவிலுக்கு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. உப்புத்துறை அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணி ஒருவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து மற்ற பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.


Next Story