தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வு தலைவராக நெடுஞ்செழியன் பொறுப்பேற்பு


தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வு தலைவராக நெடுஞ்செழியன் பொறுப்பேற்பு
x

தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வு தலைவராக சி.நெடுஞ்செழியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை,

தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வு தலைவராக (தணிக்கை-1) சி.நெடுஞ்செழியன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 1996-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், தற்போதைய புதிய பொறுப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள 37 துறைகளில், 21 துறைகளை தணிக்கை செய்யும் மாநில முதன்மை கணக்காய்வு தலைவராக இருப்பார்.

அதாவது, மாநில அரசின் நிதி, வருவாய், சுகாதாரம், கல்வி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனம் ஆகியவற்றை தணிக்கை செய்யும் பொறுப்பை அவரது அலுவலகம் மேற்கொள்கிறது. இந்த அலுவலகம், பல்வேறு தலைப்புகளில் பல தணிக்கை அறிக்கைகளை மாநில சட்டமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்கிறது.

தற்போது, தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நெடுஞ்செழியன், மத்திய அமைச்சகம் மற்றும் மாநிலத் துறைகள் மீதான தணிக்கையில் மிகுந்த அனுபவம் உடையவர். ஐக்கிய நாட்டு சபையின் நிறுவனங்களில் தணிக்கை மேற்கொண்டிருக்கிறார். மேலும், ஓமன் சுல்தானகத்தின் உச்ச தணிக்கை அமைப்பின் தணிக்கை நிபுணராகவும் பணியாற்றியுள்ளார்.


Next Story