நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா


நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
x

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

திருவாரூர்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா உதவி கல்வி அலுவலர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. வளர் கல்வி அலுவலர் முத்தமிழன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெய்சாத்பேகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் உமா வரவேற்றார். மூத்த ஆசிரியர் கற்பகாம்பிகா ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் மாணவர்களுக்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் பரிசு வழங்கி பேசினார். முன்னதாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை நிர்மலா நன்றி கூறினார்.


Next Story