நீலமணிநாத சுவாமி கோவில் தேரோட்டம்


நீலமணிநாத சுவாமி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:45 PM GMT)

கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

மேலக்கடையநல்லூர் பூமிநீளா சமேத நீலமணிநாத சுவாமி கோவில் பிரமோற்சவ விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

இன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரியும், நாளை திருக்கல்யாணமும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story