5,276 பேர் 'நீட்' தேர்வு எழுதுகிறார்கள்


5,276 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள்
x

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 7 மையங்களில் நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வை 5,276 பேர் எழுதுகிறார்கள்.

நாமக்கல்

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதற்காக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு தேர்வு மைய ஹால் டிக்கெட் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 276 பேர் தேர்வு எழுத உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் ட்ரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளியில் 668 பேரும், நேஷனல் பப்ளிக் பள்ளியில் 600 பேரும், நவோதயா அகாடமி பள்ளியில் 768 பேரும், ஸ்பெக்ட்ரம் அகாடமி பள்ளியில் 672 பேரும், ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 1,032 பேரும், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாடமியில் 432 பேரும், பாவை பொறியியல் கல்லூரியில் 1,104 பேரும் நீட் தேர்வை எழுத உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.


Next Story