நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 122 பேர் தேர்ச்சி


நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 122 பேர் தேர்ச்சி
x

கோப்புப்படம்

https://www.dailythanthi.com/News/State/2022/04/07195139/Fee-hike-for-NEET-exam--National-Examination-Agency.vpf

தினத்தந்தி 19 Jun 2023 7:00 PM GMT (Updated: 20 Jun 2023 10:19 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுதேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த 100 பள்ளிகளில் இருந்து 485 மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 17 பேர் தேர்வு எழுதவில்லை.

மீதமுள்ள 466 பேர் மட்டுமே நீட் தேர்வை எழுதினர். இவர்களில் தேர்ச்சி மதிப்பெண்ணான 107-க்கு மேல் 122 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். இவர்களில் 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்செங்கோடு அரசு பள்ளி முதலிடம்

குறிப்பாக திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் பிரசாந்த் 720-க்கு 369 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநிதி 280 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 300 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவரும், 200 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும் பெற்று உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டில் 17 பேரும், 2022-ம் ஆண்டில் 22 பேரும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story