நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கானுக்கு வாழ்த்து


நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கானுக்கு வாழ்த்து
x

புதிதாக நியமிக்கப்பட்ட நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த அப்துல்வகாப் எம்.எல்.ஏ. திடீரென அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட டி.பி.எம்.மைதீன்கானுக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. மாலை ராஜா, மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பகுதிச்செயலாளர் தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், கருப்பசாமி கோட்டையப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story