நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு


நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
x

நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் சேவை இம்மாதத்துடன் முடிவடைய இருந்தது.

மதுரை,

நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் சேவை இம்மாதத்துடன் முடிவடைய இருந்தது. இந்த ரெயிலின் சேவையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06030) நாளை, 7-ந் தேதி, 14, 21, 28-ந் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு தென்காசி வந்தடைகிறது. நள்ளிரவு 1.05 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06029) 1-ந் தேதி, 8, 15, 22 மற்றும் 29-ந் தேதி ஆகிய திங்கட்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் சென்றடைகிறது. காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

இந்த ரெயில், சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.


Next Story