மீண்டும் செயல்பட தொடங்கியது நெல்லை ரெயில் நிலையம்...!


மீண்டும் செயல்பட தொடங்கியது நெல்லை ரெயில் நிலையம்...!
x

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நெல்லையில் ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நெல்லை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.

இதில் நெல்லை ரெயில் நிலையத்தை சுற்றி முழுவதுமாக வெள்ளநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அங்கு ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளநீர் வடிந்ததால் நெல்லை ரெயில் நிலையம் இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

அதன்படி வந்தே பாரத் ரெயில் உள்ளிட்ட சில ரெயில் சேவைகளை தவிர மற்ற ரெயில் போக்குவரத்து படிப்படியாக இன்று முதல் தொடங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story