நெல்லையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்


நெல்லையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்
x

நெல்லையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கூறினார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வலட்சுமி அமிதாப் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டு, மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் தொடர்பாக பேசினார்கள். அப்போது மாநில நிதிக்குழு மூலம் மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.2½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதை மாவட்ட வளர்ச்சி பணிக்கு பயன்படுத்துவதுடன், மேலும் கூடுதல் நிதி பெறுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கூறியதாவது:-

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்தி உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன்மூலம் 31 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் மழை பொய்த்து போனதுடன், வெயிலும் சுட்டெரித்து வருவதால் வறட்சி மாவட்டமாக அறிவித்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story