நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்


நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்
x

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆவணி மூலத்திருவிழா

நெல்லை டவுன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தது.

சுவாமி சன்னதியில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் 4-வது நாளான 19-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது.

காட்சி கொடுக்கும் வைபவம்

24-ந்தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் மானூருக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 25-ந்தேதி நள்ளிரவு 1 மணி அளவில் சுவாமி சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகத்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கு, சப்பரங்களில் 4 ரதவீதிகளிலும் உலா வந்து மானூருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

அங்குள்ள அம்பலவாண சுவாமி கோவிலில் 26-ந்தேதி காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு காட்சி கொடுத்து சாபவிமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

1 More update

Next Story