நெல்லை உளவுத்துறை காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்


நெல்லை உளவுத்துறை காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
x

நெல்லை எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

நெல்லை,

விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன், நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நெல்லை மாவட்ட உளவுத்துறை காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மேலும், பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்திரம் உளவுத்துறை உதவி ஆய்வாளர் மகாராஜனும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story