நெல்லை ரெயில்கள் நேரம் மாற்றம்
வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி முதல் நெல்லை ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி முதல் நெல்லை ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு -நெல்லை
ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் தற்போது மதியம் 1.35 மணிக்கு புறப்படுகிறது. 14-ந்தேதி முதல் மதியம் 2 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் நெல்லைக்கு இரவு 9.45 மணிக்கு பதிலாக, 15 நிமிடங்கள் முன்னதாக அதாவது 9.30 மணிக்கு வந்து சேரும். இதன் மூலம் இந்த ரெயிலின் மொத்த பயண நேரத்தில் 40 நிமிடங்கள் குறைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும். ஈரோட்டுக்கு பிற்பகல் 2.30 மணிக்கு செல்வதற்கு பதில் 3 மணிக்கு சென்றடையும்.
செந்தூர் எக்ஸ்பிரஸ்
திருச்செந்தூர் -சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் தற்போது திருச்செந்தூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படுகிறது. 14-ந்தேதி முதல் 8.25 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் நெல்லைக்கு இரவு 9.10 மணிக்கு வருவதற்கு பதில் 9.30 மணிக்கு வந்து 9.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். சென்னையை வழக்கமான நேரத்தில் சென்றடைகிறது.
திருச்செந்தூர் -நெல்லை முன்பதிவில்லாத ரெயில் காலை 8.25 மணிக்கு பதிலாக 8.15 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வழக்கம் போல் 10 மணிக்கு நெல்லையை வந்தடையும்.
திருக்குறள்
இதே போல் கன்னியாகுமரி -நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு இரவு 9.25 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு வந்து செல்லும்.
நாகர்கோவில் -சென்னை சென்டிரல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு இரவு 9.25 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு வந்து செல்லும்.
வாஞ்சி மணியாச்சி -தூத்துக்குடி முன்பதிவில்லாத ரெயில் இரவு 7.20 மணிக்கு பதில் 8.25 மணிக்கு புறப்பட்டு, 9.15 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
மதுரை- செங்கோட்டை முன்பதிவில்லாத ரெயில் மதியம் 11.30 மணிக்கு பதில், 11.20 மணிக்கு புறப்பட்டு, செங்கோட்டைக்கு வழக்கம் போல் மாலை 3.20 மணிக்கு வந்தடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.