புதிய பாரத எழுத்தறிவு விழிப்புணர்வு பேரணி


புதிய பாரத எழுத்தறிவு விழிப்புணர்வு பேரணி
x

புதிய பாரத எழுத்தறிவு விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம்

தொண்டி

திருவாடானையில் வட்டார வள மையம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டார கல்வி அலுவலர் புல்லானி தொடங்கி வகித்தார். வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதி முன்னிலை வகித்தார். திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையம் அருகில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத்தறிவின் முக்கியத்துவத்துவம் மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை அனுப்பியும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வழங்கி சென்றனர். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசைலம், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story