பேராவூரணி- பட்டுக்கோட்டை இடையே புனல்வாசல் வழியாக புதிய நகர பஸ் இயக்கம்


பேராவூரணி- பட்டுக்கோட்டை இடையே  புனல்வாசல் வழியாக புதிய நகர பஸ் இயக்கம்
x

பேராவூரணி- பட்டுக்கோட்டை இடையே புனல்வாசல் வழியாக புதிய நகர பஸ் இயக்கப்பட்டது.

தஞ்சாவூர்

பேராவூரணி:-

பேராவூரணியில் இருந்து காலகம், ஒட்டங்காடு, புனல்வாசல் வழியாக பட்டுக்கோட்டைக்கு நகர பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து அசோக்குமார் எம்.எல்.ஏ., போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பஸ் இயக்க நடவடிகை எடுத்தார். இதையடுத்து பேராவூரணி அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து, 'ஏ6' என்ற நகர பஸ் இயக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் செந்தில்குமார், பேராவூரணி கிளை மேலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து கழக உதவி பொறியாளர் சுப்பிரமணியன், பரிசோதனை ஆய்வாளர் ஐயர், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் அன்பழகன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகர், நகர செயலாளர் சேகர், பேச்சாளர் அப்துல் மஜீத், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story