புதிய பஸ் நிலைய கட்டுமான பணி தீவிரம்


புதிய பஸ் நிலைய கட்டுமான பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 6:46 PM GMT)

குளச்சலில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சலில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதிய பஸ் நிலையம்

குளச்சலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்ட கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பஸ்நிலைய பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

புதிய பஸ் நிலையத்தில் அண்டர் கிரவுண்டில் மோட்டார் சைக்கிள் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. பஸ் நிலையத்தில் 38 கடைகள் கட்டப்பட உள்ளன. இந்த பணிகளை முடிப்பதற்கு ஒப்பந்தக்காரருக்கு 18 மாதம் காலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் குளச்சல் பஸ் நிலையம் தற்காலிகமாக எஸ்.பி.ஐ. வங்கி முன் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு பயணிகளின் வசதிக்காக நிழற்குடை, நேரக்குறிப்பாளர் அலுவலகம் மற்றும் குடிநீர் போன்ற வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

எம்சாண்ட் நிரப்பும் பணி

புதிய பஸ் நிலைய பணிகளில் முதல் கட்டமாக மோட்டார் சைக்கிள் பார்க்கிங் வசதிக்காக அண்டர் கிரவுண்டில் 4 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதில் எம் சாண்ட் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 4 இன்ச் அளவு எம் சாண்ட் போடப்பட்டு பின்னர் காங்கிரீட் போடப்படும். அதன் பின்னர் கம்பிகள் கட்டி காங்கிரீட் தூண்கள் எழுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.


Next Story