விக்கிரமசிங்கபுரம் பள்ளியில் புதிய வகுப்பறை; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
விக்கிரமசிங்கபுரம் பள்ளியில் புதிய வகுப்பறையை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, மன்றங்களின் துவக்க விழா, புதிய வகுப்பறை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் சுனில் பெஞ்சமின் தலைமை தாங்கி, பள்ளி மன்றங்கள் குறித்து பேசினார். தலைமையாசிரியர் அந்தோணி முன்னிலை வகித்து இலக்கிய மன்றம் குறித்து பேசினார். ஆசிரியர் குழந்தை வரவேற்றார். அகஸ்டின் இறைவணக்கப்பாடல் பாடினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தனது சொந்த செலவில் பள்ளியில் கட்டிய புதிய வகுப்பறையை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் விக்கிரமசிங்கபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் கண்ணன், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு, பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், நகராட்சி கவுன்சிலர் கிறாஸ் இமாக்குலேட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் இளமாறன் நன்றி கூறினார்.