புதிதாக தென்னங்கன்றுகள் நடவு செய்யலாம்
மயிலாடுதுறை பகுதியில் புதிதாக தென்னங்கன்றுகள் நடவு செய்யலாம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
மயிலாடுதுறை உதவி வேளாண் இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்னை மரங்கள் ஆணி வேர் அமைப்பைக் கொண்டது அல்ல. மயிலாடுதுறை மாவட்டத்தில் தென்னை மரக்கன்றுகள்நடவு செய்ய தற்போதைய சூழல் ஏற்றதாகும். மண் வகை, பருவநிலை, மற்றும் குட்டை, நெட்டை, கலப்பின ரகங்களுக்கு ஏற்ப நடவு முறைகள் மாறுபடுகின்றன. எந்த நடவு முறையை பின்பற்றினாலும் நீர், சூரிய வெளிச்சம் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவுமுறை அமைய வேண்டும். தென்னை நடவுசெய்ய வயலை நன்றாக உழவுசெய்த பின் கன்று நடவு செய்யப்படும். குழிகளில் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். மேலும் பூச்சிகள், எறும்புகள் ஆகியவற்றின் தாக்கம் கட்டுப்படும். புதிய கன்றுகளை நடவு செய்து 8 ஆண்டுகள் வரை தென்னையில் ஊடுபயிராக சோளம், நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு, இஞ்சி, வாழை போன்ற பயிர்களையும், 8 முதல் 15 ஆண்டுகள் வரை கொள்ளு, தட்டைப்பயிறு, நேப்பியர், கினியா புல் போன்ற தீவன பயிர்களையும் பயிரிடுவதன் மூலம் வருவாய் பெறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.