'காவல் உதவி' செயலியில் வியாபாரிகள் புகார் அளிக்க புதிய வசதி - டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவிப்பு


காவல் உதவி செயலியில் வியாபாரிகள் புகார் அளிக்க புதிய வசதி - டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவிப்பு
x

வணிகர்கள் தங்கள் புகார்களை காவல்துறையில் எளிதில் அளிக்கும் வகையில் காவல் உதவி செயலியில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

வணிகர்கள் தங்கள் புகார்களை காவல்துறையில் எளிதில் அளிக்கும் வகையில் காவல் உதவி செயலியில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சியில் கடந்த மாதம் 5-ந்தேதி நடந்த வணிகர்கள் சங்க மாநாட்டில், ''வணிகர்கள் தங்கள் புகார்களை காவல்துறையில் எளிதில் அளிக்க காவல் உதவி செயலியில் 'வணிகர் உதவி வசதி' என்று ஒரு புதிய வசதி ஏற்படுத்தப்படும்'', என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதனை ஏற்று, வியாபாரிகள் காவல்துறை அவசர உதவியை நாட 'வணிகர் உதவி' (ஹெல்ப் பார் மெர்சன்ட்) என்ற வசதி 'காவல் உதவி' செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் வியாபாரிகள் ரவுடிகளால் ஏற்படும் இடையூறுகள், மாமூல், ரவுடிகளால் தாக்குதல், கடை-குடோனில் திருட்டு, கந்து வட்டி, கடையில் வாக்குவாதம், சண்டை மற்றும் இதர புகார்கள் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே வியாபாரிகள் அனைவரும் காவல் உதவி செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story