சின்ன வெண்மணியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம்; மாணவர் சேர்க்கை


சின்ன வெண்மணியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம்; மாணவர் சேர்க்கை
x

சின்ன வெண்மணியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, சின்ன வெண்மணி கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள குன்னம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) எஸ்.சி.வி.டி. பாடத்திட்டத்தில் கீழ்கண்ட தொழிற் பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. 2 வருட தொழிற்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மின்சார பணியாளர் 20 இடங்களும், பொருத்துனர் 20 இடங்களும், கட்டிடபட வரைவாளர் 24 இடங்களும், மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவான தையல் தொழில்நுட்ப பிரிவில் 40 இடங்கள் உள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சேர வரும் பயிற்சியாளர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 கொண்டு வர வேண்டும்.சேர்க்கை கட்டணமாக ஓராண்டு தொழிற் பிரிவுக்கு ரூ.185-ம், 2 ஆண்டு தொழிற் பிரிவுக்கு ரூ.195-ம் செலுத்த வேண்டும். தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை 9499055881 என்ற செல்போன் எண்ணிலும், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை (கூடுதல் பொறுப்பு) 9047949366 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


Next Story