ரூ.10 லட்சத்தில் புதிய சமையல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
ரூ.10 லட்சத்தில் புதிய சமையல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி
பேட்டை:
மானூர் யூனியன் நாஞ்சான்குளம் ஊராட்சி சமுதாய நலக்கூடம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய சமையல் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மத்திய மாவட்ட துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, வார்டு உறுப்பினர் காசிம் இஸ்மாயில், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், அரிச்சந்திரன், முகமது அலி, மகளிர் அணி மேகலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story