புதிய ரேஷன் கடை திறப்பு


புதிய ரேஷன் கடை திறப்பு
x

களக்காடு அருகே புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கள்ளிகுளம் சத்திரத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வும், மாநில காங்கிரஸ் பொருளாளருமான ரூபிமனோகரன் ரேஷன் கடையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கிராமங்கள் வளர்ச்சியடைந்தால் தான் நாடு வளர்ச்சியடையும். இதை கருத்தில் கொண்டு தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம மக்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரது ஆட்சியில் கிராமங்கள் வளர்ச்சி பாதையில் செல்கின்றன. நான் கர்நாடகாவுக்கு தேர்தல் பணிக்கு சென்றபோது அங்குள்ள மக்கள் தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினர். இது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது" என்றார்.

விழாவில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், கள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீரெங்கம் ராமகிருஷ்ணன், துணை தலைவர் முத்துலட்சுமி சைமன், கூட்டுறவு துறை சார்பதிவாளர் சகாயமேரி, கூட்டுறவு பண்டக சாலை தலைவர் இளங்கோராஜ், செயலாளர் சிவசுப்பிரமணியன், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகர், நெல்லை மாவட்ட புரட்சி பாரதம் கட்சி செயலாளர் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story