அருப்புக்கோட்டையில் புதிய ரேஷன் கடை
அருப்புக்கோட்டையில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 31-வது வார்டு தெற்கு தெருவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நகர்மன்ற உறுப்பினர் ஜெயகவிதா வரவேற்றார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையக்கட்டிடத்தையும் திறந்து வைத்தார். இதில் நகர் மன்ற தலைவர் சுந்தர லட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், ஆர்.டி.ஓ. கணேசன், தாசில்தார் அறிவழகன், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துவேல் நன்றி கூறினார்.