ரூ.14 லட்சத்தில் புதிய ரேஷன் கடை
வலங்கைமானில் ரூ.14 லட்சத்தில் புதிய ரேஷன்கடையை காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
திருவாரூர்
வலங்கைமான்:
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய பகுதியில் இனாம் கிளியூர் ஊராட்சியில், நன்னிலம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடையை காமராஜ் எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். அதேபோல் நன்னிலம் சட்டமன்ற தொகுதி மேம்பட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மணலூர் கிராமத்தில் கட்டப்பட்ட கிராம கலையரங்கத்தையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சாந்தி தேவராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாக்கியலட்சுமி அருண், முனுசாமி, ஜெகதீஸ்வரன், கணேசன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story