புதிய ரேஷன் கடை திறப்பு
புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட சித்துராஜபுரம் பகுதியில் உள்ள காயாம்புநகரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தநிலையில் இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இந்தநிலையில் இப்பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர் லீலாவதி சுப்புராஜியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலின் பேரில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் லீலாவதி சுப்புராஜ் தலைமை தாங்கினார். சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயலட்சுமி உதயசங்கர், ராஜம்மாள் சுப்புராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காளிமுத்து மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற செயலர் அருள் ராஜன் செய்திருந்தார்.