புதிய ரேஷன் கடை-பல்வேறு திட்டப்பணிகள் தொடக்கம்


புதிய ரேஷன் கடை-பல்வேறு திட்டப்பணிகள் தொடக்கம்
x

க.பரமத்தி, குப்பம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை-பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம், குப்பம் ஊராட்சிக்குட்பட்ட புதூர்பட்டியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதனை மொஞ்சனூர் இளங்கோ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதற்கு குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பி.குப்பாத்தாள் தலைமை தாங்கினார். க.பரமத்தி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான நெடுங்கூர் கார்த்தி முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து க. பரமத்தி கிறிஸ்டின் தெருவில் ரூ.10 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தையும், பெரியார் நகரில் கட்டிட முடிக்கப்பட்ட ரூ. 9 லட்சத்து 55 ஆயிரத்தில் அங்கன்வாடி கட்டிடத்தையும், மாரியம்மன் கோவில் தெருவில் ஆழ்குழாய் கிணறு அமைத்து பைப் லைன் அமைக்கும் பணியையும், செம்மாண்டம்பாளையம் பகுதியில் பூங்காவிற்கு கம்பி வேலி அமைக்கும் பணியையும் இளங்கோ எம்.எல்.ஏ. தொடங்கி பின்னர் காருடையாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். மேலும் இந்த பகுதியில் நாடக மேடை, ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

இதில், எஸ்.கே.பி. புளூ மெட்டல்- கன்ஸ்ட்ரஷன்ஸ் உரிமையாளர்கள் செந்தில்குமார், ராஜேந்திரன், க.பரமத்தி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story