அரசு பள்ளியில் ரூ.1.58 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம்அமைச்சர் திறந்து வைத்தார்


அரசு பள்ளியில் ரூ.1.58 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம்அமைச்சர் திறந்து வைத்தார்
x

அரசு பள்ளியில் ரூ.1.58 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம்அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர்


பெருமாநல்லூர்

பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.58 கோடி மதிப்பில் அலுவலக அறை, தலைமை ஆசிரியர் அறை, கணினி அறை, வகுப்பறை, ஆய்வகம், நூலகம் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி, கருக்கங்காட்டு புதூரில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக்கடை என மொத்தம் ரூ.1.72 கோடி மதிப்பிலான புதிய கட்டங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 5 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட், 22-23 கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவியர்களுக்கும், பொதுத்தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 3 மாணவியர்களுக்கும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவியர்களுக்கும், தமிழ் திறனறித் தேர்வில் வென்ற 3 மாணவிகளுக்கும் பரிசு மற்றும் கேடம் வழங்கப்பட்டது.


Next Story