புதிய வேக கட்டுப்பாட்டு விதிகள்: சென்னையில் முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு


புதிய வேக கட்டுப்பாட்டு விதிகள்:  சென்னையில் முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 5 Nov 2023 9:59 AM IST (Updated: 5 Nov 2023 10:43 AM IST)
t-max-icont-min-icon

வேக கட்டுப்பாட்டு விதிமுறையை கடைபிடிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னையில் பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, இலகுரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும். இரண்டு சக்கர வாகனங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த வேக கட்டுப்பாட்டு விதிமுறை நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. அமலுக்கு வந்துள்ள வேக கட்டுப்பாட்டு விதிமுறையை கடைபிடிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் வேக கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் ரூ.1.21 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.


Next Story