சட்டம், ஒழுங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை புதிய போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தெரிவித்தார்.
பொறுப்பேற்பு
மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனராக பணியாற்றிய அரவிந்த். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரிந்த செல்வராஜ் சென்னை பயிற்சி பள்ளி முதல்வராக மாற்றப்பட்டார்.
புதிய போலீஸ் சூப்பிரண்டாக அரவிந்த் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் பொறுப்பேற்று கொண்டதும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் காட்வின் ஜெகதீஷ்குமார், நமச்சிவாயம், சிவகங்கை துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவண போஸ், பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்ட அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற அரவிந்த் 2019-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும் பின்னர் ஓசூரில் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து மதுரை மாநகர வடக்கு துணை ஆணையாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார்.