பொதுஇடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை


பொதுஇடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
x
தினத்தந்தி 30 Dec 2022 7:15 PM GMT (Updated: 31 Dec 2022 10:39 AM GMT)

பரமத்திவேலூர் பகுதிகளில் பொதுஇடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி, ஜேடர்பாளையம் ஆகிய காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) இரவு ஒரு மணிக்கு மேல் பொதுமக்கள் வீதிகளில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். வெளியில் இரு சக்கர வாகனத்தில் தேவையில்லாமல் இளைஞர்கள் சுற்றுதல் கூடாது. மேலும் மது அருந்திவிட்டு மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக வேகமாக பைக் ரேஸ் ஓட்டுபவர்களின் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டமாக சேர்ந்து கொண்டு கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விடவேண்டும். மேலும் புத்தாண்டிற்கு தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறும் பரமத்தி வேலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் கூறியுள்ளார்.


Next Story