வால்பாறை மலைப்பாதையில் புதிதாக அறிமுகம்: விபத்தில் சிக்கினால் விரைவான சிகிச்சைக்கு உதவும் நவீன அறிவிப்பு பலகை-அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு


வால்பாறை மலைப்பாதையில் புதிதாக அறிமுகம்: விபத்தில் சிக்கினால் விரைவான சிகிச்சைக்கு உதவும் நவீன அறிவிப்பு பலகை-அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை மலைப்பாதையில் விபத்தில் சிக்கினால் விரைவான சிகிச்சைக்கு உதவும் நவீன அறிவிப்பு பலகை புதிதாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைக்காக வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை மலைப்பாதையில் விபத்தில் சிக்கினால் விரைவான சிகிச்சைக்கு உதவும் நவீன அறிவிப்பு பலகை புதிதாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைக்காக வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வால்பாறை மலைப்பாதை

கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இதனால் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வால்பாறை மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில் வால்பாறை மலைப்பாதையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதை முன்னிட்டும், வனவிலங்குகளை துன்புறுத்தும் செயல் நடந்து வருவதையொட்டி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

கியூ-ஆர் கோடுடன் அறிவிப்பு பலகை

இந்த நிலையில் விபத்தில் சிக்கினால் அவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் வகையில் நவீன அறிவிப்பு பலகை வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வால்பாறை உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் வால்பாறை மலைப்பாதையில் ஆங்காங்கே சாலையோரங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையை அமைத்துள்ளனர். இந்த அறிவிப்பு பலகைகள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய வால்பாறை சிங்கோனா சாலை, சோலையாறு அணை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன அறிவிப்பு பலகையின் சிறப்பு அம்சமாக பலகையின் வலது பக்கத்தில் கியூ-ஆர் கோடு குறியீடு உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வால்பாறை மலைப்பாதையில் விபத்துகளை தடுக்கவும், கண்காணிக்கவும் நவீன அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

செல்போன் மூலம் ஸ்கேன்

இந்த சாலையில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது வழிப் பயணத்தில் யாருக்காவது மருத்துவ உதவிகள் தேவைப்பட்டாலோ இந்த பார்கோடு குறியீட்டை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் எந்த இடத்தில் ஆஸ்பத்திரி உள்ளது என்பதை தெரிவிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் விபத்துக்குள்ளான நபரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரை காக்கும் பணியை மேற்கொள்ளலாம். மேலும், இந்த நவீன அறிவிப்பு பலகையில் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். வால்பாறை பகுதிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வனத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலகையை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story