புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்... மூடக்கோரி ஒருபக்கமும், திறக்கக்கோரி ஒருபக்கமும் மாறி மாறி போராட்டம்


புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்... மூடக்கோரி ஒருபக்கமும், திறக்கக்கோரி ஒருபக்கமும் மாறி மாறி போராட்டம்
x

டாஸ்மாக் வேண்டும் என மதுப்பிரியர்களும், டாஸ்மாக் வேண்டாம் என பெண்களும் ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டம் சோமனூர் அருகே சவுடேஸ்வரி காலனி பகுதியில் புதிதாக டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதி பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள், டாஸ்மாக்கை மூடக்கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆனால், டாஸ்மாக்கை மூடக்கூடாது என அப்பகுதி ஆண்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடையை மூடினால் அதிக தூரம் சென்று மது வாங்க வேண்டிவரும் என காரணம் சொல்லியுள்ள மதுப்பிரியர்கள், பெண்களின் மனுவிற்கு போட்டியாக, டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர்.

டாஸ்மாக் வேண்டும் என மதுப்பிரியர்களும், டாஸ்மாக் வேண்டாம் என பெண்களும் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், கோவை மாநகராட்சி இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story