கோபி அருகே ஆக்கிரமித்து நடப்பட்ட தென்னை- வாழை மரங்கள் அகற்றம்


கோபி அருகே ஆக்கிரமித்து நடப்பட்ட தென்னை- வாழை மரங்கள் அகற்றம்
x

கோபி அருகே ஆக்கிரமித்து நடப்பட்ட 100 தென்னை-வாழை மரங்கள் அகற்றப்பட்டன.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே ஆக்கிரமித்து நடப்பட்ட 100 தென்னை-வாழை மரங்கள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு

கோபி அருகே உள்ள கொளப்பலூர் பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட நாகப்பகவுண்டனூரில் வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இங்குள்ள சுமார் ரூ.3கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குடிசையும் அமைத்தும் இருந்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், வாழை மரங்கள் நடப்பட்டு இருந்தன.

அகற்றம்

இவற்றை அகற்றக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு காலக்கெடு விதித்தது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இதைத்தொடர்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று கோபி-பெருந்துறை ரோட்டில் உள்ள நாகப்பகவுண்டனூருக்கு சென்றனர்.

பின்னர் அங்கு நடப்பட்டிருந்த தென்னை மரங்கள், வாழை மரங்களை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடந்தது.

100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், வாழை மரங்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வேரோடு பிடுங்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story