மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறையில் மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தினர் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் இறங்கி தமிழகத்திற்கு தண்ணீர்தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி துணை செயலர் கில்லிபிரகாஷ் தலைமை தாங்கினார். தொடர்ந்து காவிரிநீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியும், மழைவளம்பெருகி காவிரிஆற்றில் தண்ணீர்வர வேண்டி துலாக்கட்ட காவிரியில் உள்ள ரிஷபதீர்த்த நந்திபகவானிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் மண்டல பொறுப்பாளர் செல்வம், நகர அமைப்பாளர் முகமது நசீர், நகர செயலர் பாபு உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


Next Story