இரட்டை இலையில்தான் போட்டி: தேர்தல் ஆணையத்தை நாட உள்ளோம்: ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி


இரட்டை இலையில்தான் போட்டி: தேர்தல் ஆணையத்தை நாட உள்ளோம்: ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 29 Feb 2024 9:05 AM GMT (Updated: 29 Feb 2024 9:39 AM GMT)

பா.ஜ.க.வுடன் தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

சென்னை,

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக விலகிய நிலையில், பா.ஜ.க.வுடன் தான் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். எனினும், பிரதமர் மோடி தமிழகத்தில் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தார். திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். ஆனால், பா.ஜ.க.கூட்டணியில் இருப்பதாகக் கூறி வரும் ஓ பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு இல்லை. இதனால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் ஓ.பன்னீர் செல்வம் அவரை சந்திப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். ஆனால் இந்த முறை, கூட்டணி தலைவர்கள் எல்லோரும் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்காதது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம், பா.ஜ.க கூட்டணியில்தான் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் கூறியதாவது:- "பாஜகவுடன்தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உறுதியாக உள்ளது. இரட்டை இலை சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தை நாட உள்ளோம் " என கூறியுள்ளார்.


Next Story